நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம்

ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி முன்பு போராட்டம் செய்தனர்.

Update: 2021-11-19 08:32 GMT

நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் தேர்வை நடத்த வலியுறுத்தி நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டம் செய்தனர்.

நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரி மாணவ,மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரடி தேர்வை ரத்து செய்து ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி, வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாமதமாக கல்லூரி திறக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய மாணவர்கள், வகுப்பெடுக்க முறையாக  ஆசிரியர்கள் வருவதில்லை என்றும், முதல்வர் கல்லூரிக்கே வருவது கிடையாது என்றும் குற்றம் சாட்டினார்கள்.

முறையான பயிற்சி இல்லாமல் நேரடி தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால் ஆன்லைன் தேர்வை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News