மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு இன்ஷூரன்ஸ் வழங்கக் கோரியும் , நாகை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-01-28 17:42 GMT

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் முழுவதும் நாசமானதால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் பொதுச்செயலாளர் தனபால் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்றன. டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News