பூம்புகார் சுற்றுலா தளத்தில் ரூ 2.57 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

Update: 2021-07-03 16:56 GMT

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சுற்றுலாத்தளத்தில் ரூ.2.57 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்புப் பணிகளை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் ஆய்வு செய்தார்.

தமிழர்களின் வரலாற்றுச் சின்னமாகத்திகழும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பூம்புகார் சுற்றுலா தளத்தில் சென்ற 1973 -ஆம் ஆண்டு பூம்புகார் கலைக்கூடம் உருவாக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றை நினைவு கூறும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பூம்புகார் கலைக்கூடத்தில் உள்ள கண்ணகி ,கோவலன் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள், சிறுவர் பூங்கா , ஒற்றைக்கால் தூண், கண்ணகி சிலை பயணிகள் தங்கும்( நத்தை மற்றும் சிப்பி வடிவிலான) விடுதிகள் பல வருடங்களாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து போனது.

பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா வரும் பொதுமக்கள் சிதிலமடைந்த பூம்புகாரை சுற்றுலா பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். பூம்புகார் சுற்றுலா தளம் சீரமைக்கும் பணிக்காக சுற்றுலா துறை சார்பாக 2018 -19 -ஆம் ஆண்டுக்கான ரூ 2 கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சீரமைப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார், ஆய்வின்போது சுற்றுலா துறை அதிகாரிகள் உடன் இருந்தார்.

Tags:    

Similar News