மதுரை அருகே திமுகவில் இணைந்த ஊராட்சி மன்றத் தலைவர்

வணிகவரி பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவில் ஊராட்சிமன்ற தலைவர்கள் இணைந்தனர்;

Update: 2022-06-04 10:15 GMT

வணிகவரி பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவில் இணைந்த ஊராட்சிமன்ற தலைவர்கள்:

வணிகவரி பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவில் ஊராட்சிமன்ற தலைவர்கள் இணைந்தனர்.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய திமுக சார்பில், மாற்று கட்சியினர் திமுகழகத்தின் இணையும் விழா நடைபெற்றது. வணிகவரி பத்திரப்பதிவு துறை அமைச்சர் தலைமையில், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் முன்னிலையில், கொடிக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் வனிதா ராமன், துணைத்தலைவர் கனி, தவமணிபாண்டி, ஜெயபாண்டி உட்பட சுமார் 200 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோல, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் கலியுக நாதன், திமுகவில்   தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக் கொண்டார்.

இதில், திமுக நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் சிவனாண்டி, முன்னாள் ஒன்றியச்செயலாளர் உக்கிர பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் வீமா. செல்வம், மாயன், விக்கிரமங்கலம் பாண்டி அவைத்தலைவர் கனிசெல்வம், பொருளாளர் ஆசைத்தம்பி, இளைஞரணி ஆனந்த், சிவ.இளங்கோ, பிரபு, கோவிலாங்குளம் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News