கிராமக் கோயில் பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு..!

உசிலம்பட்டி அருகே கிராமக் கோயில் பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.;

Update: 2024-10-30 11:08 GMT

கிராம கோயில் பூசாரிகளுக்கு வேட்டி துண்டு மற்றும் சேலை வழங்கப்பட்டது.

தீபாவளியையொட்டி உசிலம்பட்டி அருகே கிராமக் கோயில் பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. 

உசிலம்பட்டி :

கிராமக் கோவில் பூசாரிகள் சங்கம் சார்பில்  வேட்டி, துண்டு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சேலைகள் மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பூதிப்புரம் அடைகலம் காத்த அய்யனார் கோயில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பாக, கிராம கோயில் பூசாரிகள் மற்றும் கோடாங்கிகளுக்கு வேட்டி, துண்டு, அவர்களது குடும்பத்துக்கு சேலைகள் மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

இதில், செல்லம்பட்டி ஒன்றிய இணை அமைப்பாளர் ராமசாமி பூசாரி, தலைமையில் மதுரை மாவட்ட கிழக்கு பொறுப்பாளர் பாண்டி முன்னிலையில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளில், உள்ள 50 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர். கோயில் பூசாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டனர்.

பூசாரி பேரவை சார்பில் அனைத்து கோயில் பூசாரிகள் மற்றும் கோடாங்கிகள் குடும்பத்தினருக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறியுள்ளனர். நகரங்களில் உள்ள கோயில்களைப்போல கிராம கோயில் பூசாரிகளுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைப்பதில்லை. வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு சிறிய வருமானம் கிடைக்கலாம். 

Tags:    

Similar News