பண்ணைப்பட்டியில் குடிநீர் திட்டப்பணிகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பண்ணைப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்த்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்;
பண்ணைப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்த்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாநகருக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக பண்ணைப்பட்டியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆய்வு மேற்கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டி 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல், 38 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அதன்படி, பண்ணைப்பட்டி ஏற்கனவே, உள்ள சுத்திகரிப்பு நிலையப்பணிகள் மற்றும் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும், உப்பார்பட்டி பிரிவு (தேனி) பகுதியில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் பெத்தானியாபுரம் பகுதியில் குடிநீர் கொண்டு வருவதற்காக இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகளையும் ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், செயற் பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.