செல்லம்பட்டியில் வட்டார சுகாதாரப் பேரவை கூட்டம்

மதுரை மாவட்டம்,செல்லம்பட்டியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது;

Update: 2022-08-19 08:30 GMT

செல்லம்பட்டியில் நடைபெற்ற  வட்டார சுகாதார பேரவைக் கூட்டம்


செல்லம்பட்டியில் வட்டார சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், துணை இயக்குனர் மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மருத்துவர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ,கலந்து கொண்டு மருத்துவர் பொன் பார்த்திபன் தலைமை சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்,வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ,வாய்ஸ் டிரஸ்ட் சதீல் ட்ரஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன் வரவேற்றார்.கூட்டத்தின் முடிவில், செல்லம்பட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாதுரை பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News