மதுரை பகுதி கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள்
மதுரை கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது;
மதுரை கோயில்களில், தை அம்மாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைநடைபெற்றது.
இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும் ,சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை கோமதிபுரம் ஜூபிலி டவுன் செல்வ விநாயகர் ஆலயத்திலும், ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும் உள்ள ஆஞ்சநேயருக்கு,தை அமாவாசை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, வடாமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகளும் ,விழா குழுவினரும் செய்திருந்தனர் . இதைப் போல மதுரை அருகே உள்ள சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், தை அமாவாசை முன்னிட்டு ,பக்தர்கள் ,ராகு அதிபதியான சுவாமிக்கு, நெய் விளக்கேற்றி கோயில் வலம் வந்து சுவாமி அம்பாளை வழிபட்டனர்.