தையல் இயந்திரத்தை தோளில் சுமந்த டைலர் நாகேசுக்கு அமைச்சர் உதவி.! உழைப்புக்கு கிடைத்த மகுடம்..!
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தையல் இயந்திரத்தை தோளில் சுமந்தவாறு 'தையல்..தையல்' என்ற நைந்துபோன குரலின் வீடியோ வைரலானது.;
கடந்த நாற்பது ஆண்டுகளாக தையல் இயந்திரத்தை தோளில் தூக்கிச் சுமந்து தினமும் முப்பது முதல் நாற்பது கிலோமீட்டர்கள் நடந்தே சென்று பழைய துணிகளை தைத்துக்கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் அவரது மனைவியைக் காப்பற்றி வந்த டைலர் நாகேஷ் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனக்கு உதவும்படி கண்ணீரோடு வேண்டுகோளும் வைத்திருந்தார், டைலர் நாகேஷ்.
இந்த வீடியோவை பார்த்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தார். அதனால் அவரது உதவியாளர்களிடம் கூறி டைலர் நாகேஷை அவரது காரிலேயே அழைத்து வரச் செய்தார்.
தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்துத் தரும் வேலைகளை செய்து கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை நடத்தி வந்தவர் என்பது நமக்கெல்லாம் கண்ணீர் பதிவானது.
இதோ அப்படி கஷ்டப்பட்டவரின் வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைத்துவிட்டது. டைலர் நாகேஷின் வீடியோவைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு, வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார் .
அதே போல இந்த காணொளியை, கண்ட தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், டைலர் நாகேஷை தன் வீட்டுக்கு அவரது காரில் அழைத்து வந்து, அவரது வாழ்வாதாரத்துக்குத் தேவையான நிதியுதவி செய்து மீண்டும் காரிலேயே அனுப்பி வைத்தார். டைலர் நாகேஷ், மதுரையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டைலர் நாகேஷ் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். தனது கஷ்டங்களுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றியோடு மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.