மதுரையில் தேசிய வாக்காளர் நாள் விழா: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

ஆண்டு தோறும் ஜனவரி 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

Update: 2023-01-25 16:00 GMT

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் , மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் , மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவில்,மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் பேசியதாவது: இந்திய தேசம் மிகப்பெரிய ஜனநாயக தேசம் ஆகும். பொதுமக்கள் தங்களை ஆளக்கூடிய தலைவர்கள் தேர்தல் முறையில் தாங்களே தேர்வு செய்ய முடியும். இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளை பல முன்னேறிய நாடுகளே உற்றுக் கவனிக்கூடிய வகையில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களாக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் ஆண்டு தோறும் ஜனவரி 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நடப்பாண்டில் வாக்களிப்பது சிறந்தது கட்டாயம் வாக்களிப்போம்.என்ற நோக்கத்தை வலியுறுத்தும், வகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் தேர்தல் நடைமுறைகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தேர்தல் வாக்குப் பதிவுன்போது எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும் வாக்களிப்பதை தலையாய கடமையாக கருதி கட்டாயம் வாக்களித்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் எந்தவிதமான தூண்டுதலுக்கும் ஆட்படாமல் சுயமாக சிந்தித்து ஆளுமை மிக்க தலைவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கிட முடியும் என  ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் பேசினார்.

முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர்க்கு மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது, மதுரை வருவாய் கோட்டாட்சியர் என்.சுகி பிரமிளா , மதுரை மாநகராட்சி துணை ஆணையர் திரு.முஜிபூர் ரகுமான் , அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முனைவர் தவமணி கிருஷ்டோபர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஆர்.கிருஷ்ணகுமார் உட்பட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News