மதுரை அருகே 51 ஜோடி திருமண நிகழ்ச்சிக்கு முகூர்த்தக்கால்

மதுரை அருகே 51 திருமண விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.;

Update: 2022-12-12 10:16 GMT

மதுரை அருகே 51 திருமண விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

மதுரை அருகே அதிமுக அம்மா பேரவையின் சார்பில், ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் 51 திருமண விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக அம்மா பேரவையின் சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வரும் பிப்ரவரி 23ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 51 ஏழை எளிய மணமக்களின் சமத்துவ சமுதாய திருமணத்தை, முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

இந்த திருமணத்திற்கான முகூர்த்தக்கால் அமைக்கும் பணி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் காலை 10 மணி அளவில் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் முகூர்த்தக்கால் பந்தலை வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே ராஜு, கே டி ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, கழக அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர்வி.வி.ராஜன் செல்லப்பா, எஸ். டி.கே.ஜக்கையன், சின்னதுரை, சுதா பரமசிவம், மாவட்ட கழகச் செயலாளர்கள் எஸ்.பி. சண்முகநாதன், குட்டியப்பா எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ, எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், சதன் பிரபாகரன், வெற்றிவேல், சினிமாதயாரிப்பாளர் ஜி.என்.அன்புசெழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:

புரட்சித்தலைவர் 106வது பிறந்த நாளை முன்னிட்டும், புரட்சித்தலைவி அம்மா 75 ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும், கழக 51 வது பொன் விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் கழக அம்மா பேரவையின் சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதியில், 51 ஏழை எளிய மணமக்களின் திருமணம் நடைபெறுகிறது. எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில், தனது மகள் திருமணத்தை ஆர்.பி.உதயகுமார் இதில் சேர்த்து நடத்துகிறார்.

இந்த திருமணத்தை , கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். ஏற்கனவே, கழக அம்மா பேரவையின் சார்பில் 80 திருமணங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடைபெற்றன. தற்போது, நடைபெறும் திருமணம் சமத்துவ சமுதாய திருமணமாகும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். அதற்கு முன்னதாகவே இந்த திருமண விழா ஒரு முத்தாய்ப்பாக அமையும். இந்த திருமணத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கழகத்தின் சார்பில் மக்கள் கலந்து கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News