மதுரை நகரில் குளம்போல் ஆன சாலைகள்: பொது மக்கள் அவதி
மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் கோவில் தெருவில், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது;
மதுரையில் பலத்த மழை குளம் போல மாறிய சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை நகரில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் , நகரில் மேலமடை, கோமதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல சாலைகள் குளம் போல காட்சியாக இருப்பதுடன், சேறும், சகதியுமாக அதிகமாக காட்சியளிக்கிறது.. இதனால், அவர் வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன செல்வோர், மிகவும் அவதி அடைந்துள்ளனர் .
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகளும் பல இடங்களில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் கோவில் தெருவில், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையிடும் பொது மக்கள் புகார் தெரிவித்தும், சாலையில் செப்பனிட ஆர்வம் காட்டவில்லையென கூறப்படுகிறது.
இது தொடர்பாக ,சமூக ஆர்வலர்கள் மதுரை நகரில் உள்ள மோசமான சாலைகளை, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் தனிக் கவனம் செலுத்தி சாலையில், வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை கோமதிபுரம், ஜூப்ளி டவுன், தாழை வீதி, குருநாதன் தெரு ஆகிய தெருக்களில், சாலைகள் குண்டும் குழியும் ஆக உள்ளதாலும் சேறும் செய்தி உள்ளதாலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கால் தவறி கீழே விழுகின்ற விழுக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் பாதசாரிகள் செல்ல சாலையானது. லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதே போல, மருதுபாண்டி தெருவில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் குல போல தேங்கி உள்ளன இது குறித்து மதுரை மாநகராட்சி பொறியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.