மதுரை; மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம்

மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம், மதுரையில் நடந்தது.;

Update: 2023-01-19 09:47 GMT

மதுரை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

மதுரையில், 10 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச்சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா, தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில கூட்டுறவுசசங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா, தலைமையில் கூட்டுறவுச்சங்கங்களின் தேர்தல்கள் 2023 நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்துவதற்கு 10 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல அளவிலான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டுறவுச்சங்கங்களின் தேர்தல்கள் 2023 நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்துவதற்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி , தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மண்டலங்களின் கூட்டுறவுத் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் ,மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News