ஜன. 16 மற்றும் 26 ல் 'டாஸ்மாக்' மதுபானக்கடைகளுக்கு 'லீவ்'
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களுக்காக வரும் 16, 26 ஆகிய இரண்டு நாட்களும், ‘ டாஸ்மாக்’ மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.;
மதுரை மாவட்டத்தில் வரும் 16, மற்றும் 26ல் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மாதிரி படம்)
வரும் 16 ம் தேதி அன்று "திருவள்ளுவர் தினம்" மற்றும் 26ம் தேதி அன்று "குடியரசு தினம்" ஆகியவற்றை முன்னிட்டு ,மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
மதுரை மாவட்டத்தில் 16.01.2023 - அன்று "திருவள்ளுவர் தினம்" மற்றும் 26.01.2023-அன்று "குடியரசு தினம்" ஆகியவற்றை முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மேற்கண்ட நாட்களில் மூடப்பட்டு இருக்கும். மேற்படி , நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி, தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெற கூடாது என, தெரிவித்துள்ளார்.