தேர்வில் முதல் மதிப்பெண்: மாணவிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் சமூக ஆர்வலர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்;
பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் சமூக ஆர்வலர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்:
பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் சமூக ஆர்வலர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி யூனியன், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வில்.பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி தீர்த்தனாவிற்கு, விக்கிரமங்கலம், எட்டூர் கிராம கமிட்டி செயலாளர் ஜெயபால் முதல் பரிசு பெற்ற மாணவி கீர்த்தனாவை பாராட்டி ரூபாய் 10000 பரிசு வழங்கினார்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியன், மாணவியின் அஞ்சு செமஸ்டர் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஐஏஎஸ் பயிற்சி செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். முன்னதாக, பள்ளியில், நடைபெற்ற விழாவில், ஆசிரியர்கள் மாணவர் மாணவிகள் மற்றும் பெற்றோர் எட்டூர் கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி கீர்த்தனாவை பாராட்டினர். மேலும், தொடர்ந்து வரும் காலங்களில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையும் மேற்படிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.