மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-08 15:00 GMT

நெல்லை பாலு,  செயலாளர்

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் தேர்வு  மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் கிளப் அசெம்பிளி ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. முத்துராஜ் வரவேற்றார். இதில் 2022 23 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக நாகரத்தினம், செயலாளராக நெல்லை பாலு ,பொருளாளராக பிரதாப்சுந்தர்சிங் மற்றும் நிர்வாக செயலாளராக குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், முன்னாள் செயலாளர் ஜெகன் மற்றும் சிவநாத்பாபு,  ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். சங்கப் பதவியேற்பு விழாவை விரைவில் நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் உடன் முன்னாள் தலைவர் பாலகுரு  தந்தையார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.முடிவில் செயலாளர் நெல்லை பாலு நன்றி கூறினார்

Tags:    

Similar News