கைவினை கலைஞர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
துண்டு கூலி பணியாளர் என்று அழைக்கும் நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;
மதுரையில் பூம்புகார் கைவினைஞர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாபு
கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரம் சிறக்க காலம் முறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூம்புகார் கைவினைஞர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பூம்புகார் கைவினைஞர்கள் தொழிற் சங்கத்தின் மாநிலபொதுக்குழு கூட்டம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், மாநிலத் தலைவராக தட்சிணாமூர்த்தி, மாநில பொதுச் செயலாளராக பாபு, மாநில பொருளாளராக சக்திவேல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், ஏனைய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், அதன் பொதுச்செயலாளர் பாபு செய்தியாளர் கூறும் போது: பூம்புகார் உற்பத்தி நிலையங்களில் கைவினைகளில் உள்ள தொழிற்சாலை ஆய்வாளர் வழங்கிய பணி நிரந்தர உத்தரவை நிறைவேற்றி காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும். 2011 -ஆம் ஆண்டில் பூம்புகார் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஷீலாராணி, உற்பத்தி பணி நிலையங்களில் பணிபுரிகின்ற அனைவரையும் பூம்புகார் கைவினைஞர்கள் என அழைக்குமாறு உத்தரவு அளித்ததுடன் அடையாள அட்டை யும் வழங்கினார்.
இதை நடைமுறையில் இருந்து நீக்கி, அனைத்து கலைஞர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு தற்போது வரை அனைத்து கடிதப் போக்குவரத்து மற்றும் வருகை பதிவேடுகள் துண்டு கூலி பணியாளர் என்று அழைக்கும் நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள பூம்புகார் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து கைவினை கலைஞர்களும் கலந்து கொண்டனர்.