திருமங்கலத்தில், தமிழக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே, திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்தும், அவர் பதவியை ராஜினாமா செய்யக் கூறியும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-01-20 09:18 GMT

திருமங்கலத்தில், தமிழக ஆளுநரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவியைக் கண்டித்தும், அவரது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து தமிழ்நாட்டைவிட்டு வெளியேறக் கோரியும் கண்டன கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டனம் தெரிவித்தும், உடனடியாக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என , காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர்.

இதில் ,திருமங்கலம் நகரச் செயலாளர் சௌந்தர், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், முருகேசன், காமாட்சி, மற்றும் கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News