மதுரை அருகே சுகாதார விழிப்புணர்வு பிரசாரம் : ஆட்சியர் பங்கேற்பு

நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தலைமையில் சுகாதார ஊறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.;

Update: 2023-05-01 13:16 GMT

சிவரகோட்டை கிராம ஊராட்சியில் கிராம சபையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர்  முறைப்படி துவக்கி வைத்தார்

மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரச்சாரம் மே1 முதல் ஜூன் 15 வரை செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் முக்கிய நோக்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் கழிப்பறை பயன்பாட்டினை ஊறுதி செய்து பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி கழிவுகளை தடை செய்தல், பொதுமக்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கிட வழியுறுத்துதல், பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல், அரசு அலுவலகங்களை தூய்மைப்படுத்துதல், சுற்றுலாத்தலங்கள், மதவழிப்பாட்டுத் தலங்கள், குளம் மற்றும் கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் தூய்மைப்படுத்துதல், அனைத்து கிராமங்களையும் தூய்மையான பசுமையான கிராமங்களாக மாற்றுதல் இதன் முக்கியமான நோக்கங்கள் ஆகும்.

அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்புடன் நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது.

இன்று (01.05.2023) கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் சிவரகோட்டை கிராம ஊராட்சியில் பொது இடங்களை தூய்மை செய்து மே தின கிராம சபையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரத்தை முறைப்படி துவக்கி வைத்து சுகாதார ஊறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள்.

”நம்ம ஊரு சூப்பரு" பிரச்சார இயக்கத்தின் மூலம் 01.05.2023 முதல் 15.06.2023 வரை கழிப்பறைகளை மறுசீரமைப்பு இலக்கை அடைவதற்கும்

01.05.2023 முதல் 15.05.2023 வரை பொது நிறுவனங்கள் உள்ள இடங்களை பெருமளவில் சுத்தம் செய்தல், சுகாதாரம் தொடர்புடைய அனைத்து பணியாளர்களுக்கும், சுகாதார நல முகாம் ஏற்பாடு செய்து சுத்தமான பசுமையான கிராமங்களை உருவாக்குவதற்கும்,

15.05.2023 முதல் 27.05.2023 வரை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும்,

29.05.2023 முதல் 03.06.2023 வரை ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தடை செய்தல் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும்,

05.05.2023 முதல் 15.06.2023 வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News