அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பக்கம்: ஜான் பாண்டியன் கருத்து
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கையாக உள்ளது;
பைல் படம்
90% அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின்னாடி தான் நிற்கிறார்கள் என்றார் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான் பாண்டியன்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றுதான் என்னால் கூற முடியும் 90 சதவீதம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின்னால்தான் நிற்கிறார்கள். இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றது தவறானது. தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் கோரிக்கையாக உள்ளது. வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாக எடுக்கும் நிலைப்பாடு. அதை அப்போது பார்ப்போம். அதிமுக அமைச்சராக இருந்தாலும், திமுக அமைச்சராக இருந்தாலும் எந்த அமைச்சர்களாக இருந்தாலும் அவர் கார் மீது செருப்பு எறிவது குற்றம் தான். இதை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது என்றார் ஜான்பாண்டியன்.