சோழவந்தான் அருகே நிலங்கள் தரிசு நிலமாக மாறும் அபாயம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை;
வாடிப்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான், ஆண்டிப்பட்டி பங்களா, சின்னம்ம நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த. நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித் துறையின் அலட்சியம் காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் முறையாக தண்ணீர் திறக்காததால் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறும் அபாயம் உள்ளது.
இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் கூறும் போது, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது ஒரு சில தனி நபர்களின் ஆதிக்கம் காரணமாக முறையாக தண்ணீர் விடாததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகாப் போகும் அபாயம் உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் தலையிட்டு விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.