மதுரை கோயில்களில், சுவாதி நட்சத்திர விழா!
மதுரை கோயில்களில், சுவாதி நட்சத்திர விழா நடைபெற்றது.;
மதுரை கோயில்களில் சுவாதி நட்சத்திரம் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு.
மதுரை.
மதுரை மாவட்டத்திலுள்ள கோயில்களில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், உள்ள யோக நரசிம்மருக்கு, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை அடுத்து, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன், துர்க்கை அம்மனுக்கு, வெள்ளிக்கிழமை முன்னிட்டு, சிறப்பு அபிஷே அச்சனையில் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் பலர் துளசி மாலை அணிவித்து வழிபட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
இதே போல, மதுரை தாசில்தார் நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு அர்ச்சகர் வெங்கடேசன் சிறப்பு அபிஷேகங்களை செய்து, அர்ச்சனை களை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நரசிம்மரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.