மதுரை பகுதி கோயில்களில் தைப்பூச விழா: பக்தர்கள் வழிபாடு
திருப்பரங்குன்றம் கோவில் மலையடிவாரத்தில், உள்ள பழனி ஆண்டவர் கோவில் தைப்பூசத் தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது;
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான் 2 தெய்வானை யுடன் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையடிவாரத்தில், உள்ள பழனி ஆண்டவர் கோவில் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று காலையில் 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இந்த தைப்பூச திருவிழாவையொட்டி, இன்று மாலை சுப்பிரமணியசுவாமி, தெய்வானையும், முத்துக்குமாரசுவாமி தெய்வானையுமாக சமகாலத்தில் 2 தெய்வானை, 2 முருகப்பெருமான் எழுந்தருளி கோவிலுக்குள்ளே திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்து அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.தொடர்ந்து, திருவாச்சி மண்டபத்தில் இரண்டு முருக பெருமான் இரண்டு தெய்வானை சிறப்பு அலங்காரத்துடன் வஎழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் கோவில் தைப்பூச தினத்தை முன்னிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சுப்பிரமணியசாமி, தெய்வானை, முத்துக்குமரவேல், தெய்வானை இரண்டு பல்லாக்கில் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தது தனிச் சிறப்பாகும்.
தைபூசம் விழாவில் பறவை காவடி எடுத்த பக்தர்கள்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கொண்டயம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய ஆலயம் கோவில் தை பூசத்தை ஒட்டி,பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடிமற்றும் பல்வேறு வகையான காவடிகளை சுமந்து சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் செய்திருந்தார் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. மதுரை அண்ணா நகரில் உள்ள சௌபாக்ய விநாயகர், வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில், தைபூசத்தையொட்டி, முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் நடைபெற்றது.