பரவை பேரூராட்சியில் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
மதுரை அருகே பறவை பேரூராட்சியில் குப்பைகள் எரிக்கப்படுதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை பொதுமக்கள் தடுக்க வலியுறுத்தல்;
மதுரை அருகே பரவை பேரூராட்சிக்கு உள்பட்ட சரவணா நகர் விரிவாக்கம் பகுதியில் சாலையோரம் குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை
மதுரை அருகே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து சுற்றுப்புற தூய்மை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதால் சுற்றுப்புறச்சூழல் கெடுகிறது. புதைக்கும் குப்பைகள் சிலவற்றில் இருந்து மண்ணுக்குள் நச்சுப் பொருட்கள் கசிந்து சுற்றுப்புறமெங்கும் மண்ணைக் கெடுக்கிறது. சாலையோங்களில் கொட்டப்படும், குப்பையை துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்தாமல் அந்தந்த இடங்களிேலேயே தீயிட்டு கொளுத்துவது வாடிக்கையாகி விட்டது. இதனால் அவற்றிலிருந்து வெளியேறக்கூடிய புகையால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், அவ்வழியாக வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த சூழலில், மதுரை அருகே பரவை பேரூராட்சிக்கு உள்பட்ட சரவணா நகர் விரிவாக்கம் பகுதியில், பட்டத்து அரசி அம்மன் கோவில் செல்லும் பாதையில், சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் எரியும் குப்பையை, பேரூராட்சி தூய்மை ஊழியர்கள், முழுவதுமாக அள்ளாமல், செல்வதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.