மதுரையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

இதுவரை11 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்:மேலும் தலைமறைவாக இருக்கும் 20 பேரை தேடி வருகின்றனர்;

Update: 2022-08-27 08:45 GMT

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப் பட்டார்.  இந்த வழக்கில் இதுவரை11 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்:மேலும் தலைமறைவாக 20 பேரை தேடி வருகின்றனர்:

கடந்த 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் இறந்த ராணுவ வீரருக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்தி தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செல்லும் போது அவர் மீது பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் காலணி வீசியதும் மற்றவர்கள் அவரது காரை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 31 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்  பதிவு செய்து, 10 பேரை கைது செய்தனர் .மேலும், 21 பேரை தேடி வந்தனர்.இந்நிலையில், மதுரை எச். எம். எஸ். காலனியை சேர்ந்த வினோத் குமார்(24) என்பவரை அவனியாபுரம்  போலீசார்  கைது செய்தனர்.மேலும், இவ்வழக்கில் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News