மதுரையில் பல்கலைக்கழக ஊழியர் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் 136 பேரை நிதி சுமை காரணம் காட்டி பல்கலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது;
பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 136 பேர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த போவதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 136 பேர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த போவதாக வெளியான தகவலையடுத்து பல்கலைகழக வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீஸ் குவிக்கப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய 136 பேரை பல்கலை நிர்வாகம் நிதி சுமை காரணம் காட்டி பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 136 பேரும் அரசின் காரணத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக 54 ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநர் ரவி வருவதையடுத்து, தங்களது கோரிக்கையை தெரிவிக்கவும் வகையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த போவதாக ஒட்டிய சுவரொட்டிகளால், உளவுத்துறை போலீசருக்கு தகவலை வந்ததை அடுத்து, போலீஸார், நாகமலை புதுக்கோட்டை முதல் பல்கலைக்கழகம் வரையிலான 11 இடங்களில், போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.