மதுரையில் தேவர் ஜெயந்தி: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

மதுரையில் பசும்பொன் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் திரளாகக் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்;

Update: 2022-10-30 12:00 GMT

 மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர்கள்.

பசும்பொன் தேவர் திருமகனார் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு , மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன் தமிழரசி உள்ளிட்டோர் தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர் முன்னதாக ஓ பன்னீர்செல்வம் அவர் செல்லும் இடங்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  

பாஜக சார்பில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலர் ஹெச். ராஜா, மாவட்ட நிர்வாகி சுசீந்திரன் உள்ளிட்டோர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதேபோல,சோழவந்தானில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் வாடிப்பட்டிதெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். , பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன்,மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், நிர்வாகிகள் சண்முக பாண்டிய ராஜா, திருவேடகம் மணி என்ற பெரியசாமி, கேபிள் மணி. ஜெயபிரகாஷ் பி ஆர் சி நாகராஜ் தியாகு வணங்காமுடி. சோலை கண்ணன்.மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தானில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: அமமுக.வினர் மாலை அணிவித்து மரியாதைவிழாவை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சோழவந்தானில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் திரவியம், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன்மற்றும் நிர்வாகிகள் வீரமாரி பாண்டியன், முனைவர் பாலு, வழக்கறிஞர் சந்திரசேக,ர் பி டி ஆர் பாண்டியன், ஜெயராமன், ட்ராக்டர் முருகேசன், ஜாக்குலின் மேரி, ஷோபனா, பழனியாண்டி, இப்ராகிம்ஷா, பால்ராஜ் துரை, செல்லத்துரை, மதியழகன், இருளன், தவமணி, ராதாகிருஷ்ணன், ஹரி, வடகாடுபட்டி லெனின், மீனாட்சி சுந்தரம், அம்பிகிருஷ்ணன் சுந்தர்,  ரபீக் மற்றும் சோழவந்தான் வாடிப்பட்டி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர் பின்னர்.தேவர் சிலை முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் முடி காணிக்கை செலுத்தி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News