மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த பயணிகளால் சலசலப்பு:
மதுரையில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் தினமும் நண்பகல் 12:45 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இதற்காக பயணிகள் ஆறு மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் தங்களுடைய ஆவணங்களை சரிபாரத்த பின்னரே துபாய் செல்கின்றனர்.
இந்த நிலையில், மதுரையிலிருந்து துபாய் சென்ற ஸ்பைஜெட் விமானம் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் இன்று காலை 8:45 மணி அளவில் மதுரை வரவேண்டும். ஆனால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது வரை துபாயில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வரவில்லை.
இதனால், மதுரையில் இருந்து துபாய் செல்ல இன்று காலை வருகை தந்த 176 பயணிகளும் மதுரை விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களிடம் துபாய் செல்ல வருகை புரிந்த 176 பயணிகளும் விளக்கம் கேட்டதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் முறையான விளக்கம் எதுவும் தரப்படாமல், பயணிகளை அலைக்கழித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.
இதனால், சில பயணிகள் விமானத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர், 126 பயணிகள் மட்டும் தற்போது துபாய் செல்ல தொடர்ந்து மதுரை விமான நிலைய ஸ்பைஸ் செட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பட்டதை அடுத்து, மும்பையில் இருந்து துபாய்க்கு ஒரு விமானம் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து பயணிகளுடன் மதுரை வந்ததும் நள்ளிரவு ஒரு மணி அளவில் துபாய் விமானம் மதுரை வந்தடையும் என்றும் அதன் பின் துபாய் புறப்பட்டு செல்லலாம் என ஸ்பைஜெட் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் அதுவரை பயணிகளுக்கான இரவு உணவு போன்றவற்றை தாங்கள் வழங்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.