சோழவந்தான் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-07-05 07:45 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான்  வாசகர் வட்டத் தலைவர் செல்லவேல் தலைமை வகித்தார் .கிளை நூலகத்திற்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் நூல் அடுக்கு வழங்கிய மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு நன்றி தெரிவிப்பது, போட்டித் தேர்வு நூல்கள் வழங்க கோரிக்கை வைப்பது, நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் பொருட்டு இலவச காலி மனை பெறுவது குறித்து  அரசிடம் கோரிக்கை வைப்பது  என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நூலகர் ,பாலமுருகன் நன்றி தெரிவித்தார். இதில் ,வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள், புரவலர்கள், வாசகர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News