சோழவந்தான் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள்
பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலம் மழை நீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது;
பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலம் மழை நீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் வைகையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பேரூராட்சி விரிவாக்க பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மழை நீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதாகண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், முத்துச்செல்வி, சதீஷ், கொத்தாலம் செந்தில், குருசாமி,.பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அமெச்சூர் பணியாளர்கள் உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டு மழை நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்