மதுரை அருகே விசாக நட்சத்திர கோயிலில் பிரதோஷ விழா
சோழவந்தான் பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு;
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ விழா
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பிரளய நாத சுவாமி அம்பாளுடன் பிரியா விடையில் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் என்று முழக்கமிட்டு பின்தொடர்ந்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷ ஏற்பாடுகளை எம் எம் குழும தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். செயல் அலுவலர் இளமதி பணியாளர் பூபதி உள்ளிட்டார் கலந்து கொண்டனர். அர்ச்சகர் ரவி பூஜைகள் செய்தார்