சமயநல்லூர் அருகே பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்
தேனூர்.ஊராட்சி கட்டபுளி நகரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்;
மதுரை புறநகர் மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர்.ஊராட்சி கட்டபுளி நகரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்
மதுரை புறநகர் மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர்.ஊராட்சி கட்டபுளி நகரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் சமயநல்லூர் மண்டல் கட்டபுளி நகரில் உள்ள நான்கு வழிச்சாலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கருப்பசாமி கோவிலில் பொங்கல் வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. கிளை தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தவமணி முன்னிலை வகித்தார். அதிமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர் முத்துராஜா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் இதில் நிர்வாகிகள் ஜெயபாண்டி, லோகநாதன், மதன்ராஜ், முத்து, மணிகண்டன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.