அலங்காநல்லூர் அருகே ரூ. 8 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு: எம்.பி. தொடக்கி வைப்பு

அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்கை எம்.பி. ரவீந்திரநாத் திறந்து வைத்தார்;

Update: 2023-01-11 09:00 GMT

அலங்காநல்லூரில் ரூ. 8 லட்சம் மதிப்பில்  அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கை எம்.பி. ரவீந்திரநாத் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெப்பக்குளம் பகுதியில் தேனி நாடளுமன்ற உறுப்பினர் தொகுதி மேபாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட  உயர் மின் உயர்மின் கோபுர விளக்கை  தேனி எம்.பி. ரவிந்திரநாத்.திறந்து வைத்தார்.

முன்னதாக, அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர்  ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ரவீந்திரநாத் எம்.பி.யை வரவேற்று, சால்வே அணிவித்தார் .  இந்த விழாவில் மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் கல்லணை சேது சீனிவாசன், முடுவார்பட்டி முத்துகிருஷ்ணன், பேரூர் செயலாளர் வெள்ளைகங்கை, பாலமேடு நகர செயலாளர் சேகர்,தொகுதிச் செயலாளர் எரம்பட்டி முருகன், மாவட்ட மகளிர் அணி பிரதிநிதி தமிழரசி, முனியசாமி, டைல்ஸ் ரவி, மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News