சோழவந்தான் அருகே மகாளய அமாவாசை தர்ப்பணம்: பக்தர்கள் கூட்டம்

திருவேடகம் வைகை ஆற்றில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.;

Update: 2022-09-25 10:15 GMT

மதுரை மாவட்டம் திருவேடகத்தில் உள்ள வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்

மதுரை மாவட்டம் திருவேடகம் வைகை ஆற்றில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பிரசித்தி பெற்ற திரு ஏடகநாதர் சிவன் கோவிலில் மஹாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர்.

தொடர்ந்து அருகில் உள்ள வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தங்களின் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருகின்றனர். முக்கியமாக தை அமாவாசை சித்திரை அமாவாசை புரட்டாசி அமாவாசை போன்றவை முன்னோர்களை நினைவு கூறுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் புரட்டாசி மாசம் பிரதோஷத்தை தொடர்ந்து வரும் அமாவாசையான மகாளய அமாவாசை என மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நாளில் வருடத்தில் ஒரு நாள் மட்டும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தால் தங்களின் பாவங்கள் போகும் தங்களின் வம்சம் விருத்தியாகும் குலம் பெருகும் என்பது பொதுமக்களின் ஐதீகம். இந்த வகையில், மதுரை மாவட்டம் திருவேடகத்தில் உள்ள வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.மற்றும் அங்குள்ள பசு மாடுகளுக்கும் உணவு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவைகள் செய்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைகை ஆற்றில் திரண்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Tags:    

Similar News