சோழவந்தான் கிருஷ்ணன் கோயிலில் திருக் கல்யாண நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கம் நிதியுதவி
சோழவந்தான் கிருஷ்ணன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் 50 ஆயிரம் நன்கொடை அளித்தார்;
சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலரும், நகர அரிமா சங்கத் தலைவருமான டாக்டர்.எம் மருது பாண்டியன் , ரூ. 50,000 நன்கொடை அளித்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டில், அமைந்துள்ள ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சீதா திருக்கல்யாணம் உற்சவத்திற்கு வார்டு கவுன்சிலரும், நகர அரிமா சங்கத் தலைவருமான டாக்டர்.எம் மருது பாண்டியன் , ரூ. 50,000 நன்கொடை அளித்தார். கடந்த சில வருடங்களாக சமூகம் மற்றும் பொது சேவை பணிகளில் முழு நேரமாக சேவை செய்து வரும் மருது பாண்டியன் ,ஆன்மீக நிகழ்ச்சிகளில், நன்கொடை வழங்கி சமூக சேவை செய்து வருகிறார் .அவரை, திருக்கோவில் பணிக்குழு நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.