இரும்பாடி காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இரும்பாடி கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான காசிவிஸ்வநாதர்கோயில் விரைவில் புனரமைப்பு செய்யப்படுமென அமைச்சர் சேகர்பாபு தகவல்;

Update: 2022-09-10 08:45 GMT

 தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இரும்பாடியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாதர் கோயில் விரைவில் புனரமைப்பு செய்யப்படும் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிதலமடைந்த நிலையில் உள்ளதாகவும், ஆகையால் கோயில் புனரமைப்பு பணிகளை உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும், சில தினங்களுக்கு முன்பு கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். மேலும் கோயில் அருகில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் ஆகையால் பக்தர்கள் கோவிலுக்கு வர அச்சப்படுவதாகவும் உடனடியாக கோயிலை புனரமைப்பு செய்து குடமுழக்கு நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து இன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இரும்பாடியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு மாதத்திற்குள் கோயில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்றும் அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் கோயில் சம்பந்தமான சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள அய்யனார் ஊர்காவலன் கோவிலை பார்வையிட்டு கோவிலுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.அதனைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அமைச்சருக்கு பூரண கும்பம் மரியாதை மற்றும் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. உடன் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News