சோழவந்தான் நகரில் இம்மானுவேல்சேகரன் நினைவு நாள்
தியாகி இம்மானுவேல் சேகரன்.67 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது;
சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற தியாகி இம்மானுவேல் சேகரன்.67 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனின்.67 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று வேப்ப மர பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் செல்வராணி ஜெயராமச்சந்திரன், குருசாமி, முத்துச்செல்வி சதீஷ், மற்றும் நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, சுரேஷ், இளைஞர் அணி முட்டை கடை காளி, ஆர். ஆர். ரவி, மில்லர், தவமணி, தவம், சங்கங்கோட்டை சந்திரன் பி ஆர் சி பாலு ராஜா நூலகர் துரைச்சாமி முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.