மதுரை அருகே கோவில் விழாவில் நடனம் ஆடிய நடிகர் புரோட்டா சூரி
கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவினை சூரியின் நண்பர்கள்,ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகிறார்கள்;
கோவில் விழாவில் நடனமாடிய நடிகர் சூரி
கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என நடிகர் சூரி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், அவருடைய சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவினை சூரியின் நண்பர்கள்,ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகிறார்கள்.
இதன் மூலமாக நடிகர் சூரி, சுவாமி பக்திக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல அவர் கடவுள நம்பிக்கை மிக்கவர் அவருடைய குடும்பம் சாமியாடும் குடும்பம் என்பதை அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.சமீபத்தில் ,மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேசிய நடிகர் சூரி எதேச்சையாக கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் ஆடியோக்கள் மூலமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கு, ஹிந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் .
இந்நிலையில், சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் ,ராசாக்கூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் , திரைப்பட நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது சொந்த ஊர் காரர்கள் அவரது நண்பர்கள் நடிகர் சூரியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ விட்டு வருகிறார்கள் .அதில், அவர்களின் கருத்தாக நடிகர் சூரி சுவாமி பக்திக்கும் கோவிலுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல ,அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவருடைய குடும்பம் ஒரு சாமியாடி குடும்பம் என்பதை கருத்தாக பதிவிட்டுள்ளனர்.இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.