உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-08-18 15:30 GMT

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 119 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 18 வயதிற்கு குறைவாக உள்ள கிருஷ்ணகிரி வட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கூராய்வு குழு முகாம் நடந்தது. இந்த முகாமினை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், இன்று கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கூராய்வு குழு முகாம் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கேயே வருகிற 25ம் தேதி போச்சம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்டவர்களுக்கும், செப்டம்பர் 1ம் தேதி அஞ்செட்டி மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கும், செப்டம்பர் 8ம் தேதி ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கும் முகாம் நடைபெறும்.

இம்முகாமில் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி வரப்பெற்ற 263 மனுக்களில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழு கூராய்வு முலம் பயனாளிகளை தேர்வு செய்து, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, கண் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு மூலம் பரிசோதனை செய்து, தகுதியான நபர்களை தேர்வு செய்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்கள் மீது தீர்வு காணும் விதமாக இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட 3 சக்கர பெட்ரோல் வாகனம் ஒருவருக்கு ரூ.76,500 மதிப்பிலும், தலா ரூ.5,300 மதிப்பில் 100 நபர்களுக்கு ரூ.5.30 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களும், தலா ரூ.560 மதிப்பில் 10 நபர்களுக்கு ரூ.5600 மதிப்பில் ஊன்றுகோல்களும், தலா ரூ.4,200 மதிப்பில் 8 நபர்களுக்கு ரூ.33,600 மதிப்பில் உருபெருக்கியும் என மொத்தம் 119 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News