லஞ்சம் வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளருக்கு குரல் பரிசோதனை: நீதிபதி உத்தரவு

லஞ்சம் கேட்ட வழக்கில் கூட்டுறவு சார் பதிவாளரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-25 14:00 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு ரூ.47 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூட்டுறவு கடன் சங்க தலைவர் மதிவாணன், கிளர்க் அசோகன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்ற கூட்டுறவு சார்பதிவாளர் ராஜா, அவர்களிடம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியானது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், அசோகன் ஆகியோர் மயிலாப்பூர் தடைய அறிவியல் பரிசோதனை கூடத்தில் ஆஜராகி குரல் மாதிரி பதிவு செய்த நிலையில், சார்பதிவாளர் ராஜா குரல் மாதிரி பதிவுக்கு ஆஜராகாமல் உள்ளார்.

மேலும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தொடர்புகொண்டு தற்போதைய வங்கி தலைவருடன் பேசி மீண்டும் வேலை வாங்கித் தருவதாகவும், பணம் தருவதாகவும் கூறிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியைச் சேர்ந்த சார்பதிவாளர் ராஜாவை 27ம் தேதி காலை மயிலாப்பூர் தடைய அறிவியல் பரிசோதனை கூடத்தில் ஆஜராகி, குரல் மாதிரியை பரிசோதனைக்கு வழங்க வேண்டுமென இன்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை சிறப்பு நீதிபதி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 27ம் தேதி சார்பதிவாளர் ராஜா குரல் மாதிரி பதிவு செய்யும் பட்சத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News