வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது.

Update: 2021-09-02 12:45 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டம்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மோடி அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தியது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சுபத்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சபாநாயகராக முனியன் தேர்வு செய்யப்பட்டார். நகர தலைவர் உபேத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய செயலாளர் சிவராஜ், மூன்று வேளாண் சட்டங்களினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும், ரயில்வே, வங்கி, காப்பீடு, ராணுவ தொழிற்சாலை ஆகியவற்றை தனியார் மயமாக்கக்கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்சாரத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது. பொகசஸ் மூலம் ஒட்டு கேட்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சாசனம் வழங்கி நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை உடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர். பின்னர் மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றினார்.

Tags:    

Similar News