நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கிருஷ்ணகிரியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது

Update: 2022-02-09 09:00 GMT

கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட  கொடி அணிவகுப்பு பேரணி

கிருஷ்ணகிரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் அதற்கான பணிகளை முடக்கி விட்டு உள்ளது. அதன்படி தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கவும் போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி நகர போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது. நகர காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இந்த பேரணி பெங்களூர் சாலை வழியாக டிபி லின்க் சாலை சென்று அங்கிருந்து பழையபேட்டை காந்தி சிலை, காந்தி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சென்று இறுதியாக கிருஷ்ணகிரி ரவுண்டான பகுதியில் பேரணி நிறைவடைந்தது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த பேரணியில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு, உளவு பிரிவு, மகளிர் காவலர்கள் உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News