தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் பழையபேட்டை டிபி சாலையில் இன்று நடந்தது.

Update: 2021-09-11 06:00 GMT

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு திட்டத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் டேவிட் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலயாளர் சேக்கிழார் பங்கேற்று, சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், திட்ட பொருளாளர் தீர்த்தகிரி நன்றி கூறினார்.

கூட்டத்தில், மின்சார சட்டத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 380 ரூபாய் தின ஊதியம் அளித்து தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். சுகாதாரப் பணிகளுக்கு பகுதி நேரப் பணியாளர்களை நியமிக்காமல் உள்ள ஆயிரம் பேரை உடனே பணியமர்த்த வேண்டும். ஊதிய உயர்வு, வேலை பளு பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். கேங்க்மேன் பணியாளர்களை சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News