கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக குறைவு

தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை அடுத்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2021-09-14 02:15 GMT

கேஆர்பி அணை.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை அடுத்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீரின் அளவு 177 கன அடியாக குறைந்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பரவலாக தொடர்ந்து பெய்து வந்த. மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து கடந்த 10ம் தேதி வினாடிக்கு 436 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 177 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 50.15 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அணையின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் அணைக்கு வரும் நீரில் 177 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 52 அடியான அணையின் உயரத்தில் 52.15 அடி நீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து 177 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News