தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவன் மாயம்: தேடும் பணி தீவிரம்

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய 11ம் வகுப்பு மாணவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-11-30 13:52 GMT

நீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர்.

கிருஷ்ணகிரி ராசி வீதியில் உள்ள நகராட்சி குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர் மாதையன் கிருஷ்ணகிரி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் லதா துணி துவைப்பதற்காக தனது 11ம் வகுப்பு படிக்கும் மகன் ஹரிராஜுடன் காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் என்னும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு சென்றுள்ளார்.

ஒரு பாறையின் மீது லதா துணி துவைக்கும்போது,  குளித்துக்கொண்டிருந்த ஹரிராஜ் ற்றின் நடுவே சற்று ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அதனை பார்த்த அவர் அம்மா அங்கு செல்லவேண்டாம் திரும்பி வா என அழைத்துள்ளார். ஆனால் அதனை கேட்காமல் ஹரிராஜ் சென்றபோது தீடிரென ஆழமான பகுதிக்கு சென்று நீரில் முழ்கி உள்ளார்.

நீச்சல் தெரியாது ஹரிராஜ் தனது அம்மாவிடம் காப்பாற்றுங்கள் என அலறியதால், லதா கூச்சலிட்டார். உடனடியாக அருகே இருந்தவர்கள் மாணவன் ஹரிராஜ்யை தேடினர். ஆனால் அதற்குள் நீரில் மாயமானர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மாயமான மாணவன் ஹரிராஜ்யை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து சென்ற கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சரவணன் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

தொடர் மழை காரணமாக கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆற்றில் குளிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை கேட்காமல் ஆற்றில் குளித்தால் இந்த விபரீதம் நடந்து உள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால் தேடும் பணி சற்று கடினமாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News