மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள், ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி அருகே மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2022-01-15 12:22 GMT

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னப்பனமுட்லு கிராமத்தில் கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதுகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்ட கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆண்டுத்தோறும் தைப்பொங்கல் பண்டிகையை  அடுத்து வரும் மாட்டுப் பொங்கலன்று உணவு உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் நமது பாரம்பரிய வீரத்தினை பறை சாற்றும் வகையில் விளங்கும் ஜல்லிகட்டு எருதுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் தமிழர்களின் பாரம்பிரிய வழக்கத்தின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பனக முட்லு கிராமத்தில் மாட்டு பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதில் தமிழர் பாரப்பரிய மஞ்சுவிரட்டு சங்கத்தின் மாவட்ட பெருலாளர் அண்ணாமலை லட்சுமி தலமையில் நடைப்பெற்ற இந்த விழாவின்போது விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் ஜல்லிகட்டு எருதான சொப்பனசுந்தரி உள்ளிட்ட பல்வேறு எருதுகளை குளிப்பாட்டி , கொம்புகளை சீவி, கொம்புகளுக்கு வர்ணம்பூசி, பூமாலைகள் அணிவித்தும் மாட்டு தொழுவங்களை வண்ண கலர்களால் அலங்காரம் செய்து மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்கள்.

அதைத்தொடர்ந்து, கால்நடைகளுக்கு பழ வகைகள், பொங்கல் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தானியங்களை படையல் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். பின்னர் படையளிட்ட உணவு வகைகளை, கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

இதனைத்தொடர்ந்து எருதுகளை அழைத்து வந்து ஊர் மத்தியில் எருதுகளைக் கொண்டு எருதாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதோ போல பர்கூர், கும்மனூர், ஜெகதேவி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மாட்டுப்பொங்கள் விழா களைக் கட்டியது.

Tags:    

Similar News