தமிழகத்தில் முதல் முறையாக சூரிய சக்தியில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

கிருஷ்ணகிரியில் சூரிய சக்தியில் இயக்கும் புதிய பேருந்து பயணிகள் நிழற்கூடத்தை எம்.பி., செல்லகுமார் திறந்து வைத்தார்.

Update: 2021-09-16 08:45 GMT

கிருஷ்ணகிரியில் சூரிய சக்தியில் இயக்கும் புதிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை எம்.பி., செல்லகுமார் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி - சென்னை - சேலம் சந்திப்பு சாலை ஆவின் மேம்பாலம் அருகே நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் தமிழகத்தில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் புதிய பயணிகள் பேருந்து நிழற்கூடம் ரூ.13.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பேருந்து பயணிகள் நிழற்கூடத்தை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் இன்று துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த புதிய பேருந்து பயணிகள் நிழற்கூடத்தில், பயணிகள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இரவு முதல் அதிகாலை வரை எரியும் வகையில் மூன்று விளக்குகள் மற்றும் வழித்தடங்களில் செல்லக்கூடிய பேருந்துகள் எண்கள் அவற்றின் நேரம் குறிப்பிடும் வகையிலும், எல்இடி திரையும் மற்றும் பொதுமக்கள் அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் எல்இடி டிவி போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் டிவி மூலம் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து அதன் மூலம் வரும் வருவாயில் இந்த நிழற்கூடத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரித்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விரிவாக்கம் போன்ற நேரங்களில் இந்த புதிய பயணிகள் நிழற்குடை அகற்றாமல் அப்படியே வேறு இடத்திற்கு மாற்றும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பண செலவினங்கள் குறையும் தரமான பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் பொருட்களால் நிறுவப்பட்டுள்ள இந்த நிழற்கூடத்தை, பொதுமக்கள் பொறுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News