மதுக்கடைகள், வணிக வளாகங்களை மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரியில் மதுக்கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-04-29 18:13 GMT

தமிழகத்தில் நாளை (30ம் தேதி) வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணகிரி நகரில் தியேட்டர்கள், பார்கள் மூடப்பட்டாலும், பெரிய கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலையில் நாள்தோறும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணகிரியில் மிகவும் அதிகமான தொற்று பாதிப்புகள் உள்ளன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி கடைவீதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக செல்வதாலும், சமூக இடைவெளியின்றி நின்று பொருட்கள் வாங்குவதாலும் கொரோனா தொற்று மேலும் அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளது.

பார்கள் மூடபட்டாலும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வணிக வளாகங்கள் திருந்திருப்பதால், தேவையின்றி மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளும், போலீசாரும் திணறி வருகின்றனர். எனவே, பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மதுக்கடைகளை வரும் நாட்களில் மூட உத்தரவிட வேண்டும். கட்டுப்பாட்டு விதிமீறலில் ஈடுபட்டுள்ள கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே கொரோனா தொற்று பரவல் குறையும் எனவும் அவர் தெரிவித்தனர்

Tags:    

Similar News