சீதாவுக்கும் ராமருக்கும் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரியில் ராம நவமியையொட்டி சீதா ராமர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-04-29 03:15 GMT

கிருஷ்ணகிரியில் நடந்த சீதா-ராமர் திருக்கல்யாண வைபவம்.

கிருஷ்ணகிரியில் ராம நவமியையொட்டி சீதா ராமர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய, ராகவேந்திர சுவாமி திருக்கோவிலில், ராம நவமியையொட்டி கடந்த 21ம் தேதி கணபதி நவகிரஹ ஹோமம் மற்றும் சீதாராம வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. அன்று முதல் தினமும் காலை வேதபாராயணங்களும், சிறப்பு அபிஷேகங்களும், மாலையில் ஸ்ரீ விஷ்ணு ஸ்ஹஸ்ர நாம பாராயணமும், லட்சார்ச்சனையும் நடந்தது.

நேற்று ஸ்ரீசீதா திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீசத்ய நாராயண ஸ்வாமி பூஜையும், 11 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணமும் நடந்தது. பக்தர்கள் பங்கேற்க தடை உள்ளதால் இந்நிகழ்ச்சி நேரடியாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்தனர். இதில், கோவில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வருகிற 30ம் தேதி ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீராம ஆஞ்சநேய சேவா சமிதி ட்ரஸ்ட் அமைப்பினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News