பர்கூரில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பேரூராட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கையெழுத்து இயக்கம் நடந்தது.

Update: 2021-09-15 15:00 GMT

பேரூராட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில், பேரூராட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தூய்மைப் பணியாளர் சங்க தலைவர் தங்கராஜ் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒப்பந்தம், வெளிச்சந்தை, தினக்கூலி, சுய உதவிக்குழு போன்ற முறைகளை முற்றிலும் கைவிட்டு, சேவை கட்டணம் என்ற பெயரிலான நிதி விரையத்தை தடுத்து, பணியமர்த்தப்பட்ட அனைவரையும் நேரடி பணியாளர்களாக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்கள், அவர்கள் எந்தப் பெயரில் வைக்கப்பட்டிருந்தாலும் ஊதியம் வழங்கிய வங்கி கணக்கு ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும். பணி நிரந்தரப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்கள் காலத்தே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியம் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார். இதில், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு, கையெழுத்து இயக்க கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News